இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு கொரோனா

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறப்பது தொடர்பில் பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சமடையத் தேவையில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் முகமாக யுக்ரைனிலிருந்து 180 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த விமானம் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை நேற்று முன்தினம் (28) வந்தடைந்தது.

இதன்போது குறித்த சுற்றுலாப் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது குறித்த விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்த யுக்ரைன் நாட்டு பிரஜைகளில் 03 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மூவருக்கும் நேற்றிரவு (29) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுலாப் பயணிகளை சிகிச்சைகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

 

You may also like...