டெங்கு பரிசோதனைக்கு சென்ற குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம் – நீண்ட உறக்கத்துக்குச் சென்ற குழந்தை

பாணந்துறை பொது மருத்தவமனைக்கு டெங்கு பரிசோதனைக்காக வந்த குழந்தைக்கு செவிலியர் ஒருவர் தவறாக வேறு ஒரு மருந்தை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்படடவர் ஒரு வயதும் 07 மாதங்களுமான சிறுமி என கூறப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை தனது தாயருடன் டெங்கு பரிசோதனைக்க்காக பாணந்துறை வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் நாய்கடிக்கு ஏற்றும் ஊசியை தாதி ஒருவர் ஏற்றியுள்ளார்.

இதனை அடுத்து குழந்தை சில மணி நேரங்கள் உறங்கிவிட்டதாகவும் பின்னர் சுயநினைவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிருவாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

You may also like...