நீதியமைச்சர் அலி சப்ரி பதவி விலகினாறா? உண்மை வௌியானது

நீதியமைச்சர் அலி சப்ரி பதவி விலகினார் என்ற செய்தி உண்மையற்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில ஊடகத் தகவல்களின்படி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகியதாக கூறப்படுவதை அமைச்சரின் இணைப்பு செயலாளர் ஷமீர் ஸவாஹிர் மறுத்துள்ளார்.

இந்த தகவல் பொறுப்பற்ற அறிக்கையால் குழப்பநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, த லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.

இராஜினாமா கடிதத்தை நேற்று (29) காலை ஜனாதிபதியிடம், நீதி அமைச்சர் கையளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நீதி அமைச்சரின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

You may also like...