சடலங்களை தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

தமிழ் ​செய்திகள் இன்று


சடலங்களை தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு வத்தளை நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் ஸ்ரீ புத்திக்க ஸ்ரீ ராகல முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த நால்வரில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த நால்வரின் சடலங்களையும் தகனம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்த ஏனையவர்களின் சடலங்களுக்கு பிரேத பரிசோனைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த வழக்கு விசாரணையின் போது, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் அனைவரது சடலங்களையும் தகனம் செய்யும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.