உக்ரைனில் இருந்து வந்த மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா

உக்ரேனில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப்பயணிகளில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, உக்ரேனில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகளில் 6 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் பெரும் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப்பயணிகளை அழைத்து வரும் வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 28 ஆம் திகதி 185 சுற்றுலாப்பயணிகள் உக்ரேன் நாட்டில் இருந்து இலங்கை வந்திருந்தனர்.

பின்னர் இரண்டாவது குழுவாக கடந்த 29 ஆம் திகதி உக்ரேனில் இருந்து மேலும் 204 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like...