கொரோனாவுடன் தப்பிச் சென்ற கைதிகள் பயணித்த பஸ்

பொலன்னறுவை, கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (31) காலை தப்பிச் சென்ற சிறைக்கைதிகள் பயணித்த பேருந்துகளில் பயணித்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து கொரோளா தொற்றுடைய ஐந்து சிறைக்கைதிகள் இன்று அதிகாலை தப்பிச்சென்றதுடன், ஒருவர் கைது செய்ய்பட்டுள்ளார்.

குறித்த 5 சிறைக்கைதிகளும் பொலன்னறுவையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த NB 9268 என்ற பேருந்தின் ஊடாக தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்து இன்று காலை 5.45 மணியளவில் பொலன்னறுவையில் இருந்து கொழும்பு ஊடாக மாத்தறை நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த பேருந்தில் பயணித்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

You may also like...