நீதியமைச்சர் அலி சப்ரியை உடனடியாக கைது செய்ய கோரிக்கை

தமிழ் ​செய்திகள் இன்று


நீதியமைச்சர் அலி சப்ரியை உடனடியாக கைது செய்ய கோரிக்கை

நீதி அமைச்சர் அலி சப்ரியை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

உலப்பனே சுமங்கல தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இனவாத கருத்துக்களை வௌியிட்டு முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிடும் செயலில் நீதி அமைச்சர் அலி சப்ரி ஈடுபட்டுள்ளதாக உலபனே தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அலி சப்ரி வௌியிட்டுள்ள இக்கருத்து மிகவும் ஆபத்தானது எனவும் இவ்வாறன கருத்து வௌியிடும் நபர் நீதி அமைச்சராக செயற்படத் தகுதி அற்றவர் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சடலங்களை புதைப்பதற்கு அனுமதி அளிக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படுவர் என அலி சப்ரி வௌியிட்டுள்ள கருத்து மூலம் முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியுள்ளதாக உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதை முஸ்லிம் மக்களிடம் உறுதி செய்யும் வகையில் அலி சப்ரி செயற்படுவதாக தேரர் கூறினார்.