பாகிஸ்தானில் இந்துக் கோவிலை இடித்து தீ வைப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


பாகிஸ்தானில் இந்துக் கோவிலை இடித்து தீ வைப்பு

பாகிஸ்தானில் இந்து மத கோவிலொன்று இடித்து, தீவைத்து முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரக் மாவட்டம் தெறி என்ற கிராமத்திலிருந்த இந்து மத கோவிலில் வாரம் தோறும் அப்பகுதியில் வசித்துவரும் இந்துக்கள் வழிபாடு செய்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை இக்கோவிலை ஒரு கும்பல் இடித்து தீக்கிரையாக்க்கியது. பெரும் எண்ணிக்கையானோர் கோவிலை தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

ஆயிரக்கணக்கானோரை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர். எனினும் அதற்கிடையில் கோவில் அழிக்கப்பட்டது.

இச்சம்பவத்துக்கு முன்னர் தெறி கிராமம் அருகே ஜமாத் உலேமா இ இஸ்லாம் எவ் என்ற கட்சி நேற்று பேரணி ஒன்றை நடத்தியது.

இந்நிலையில், தனது கட்சி பேரணிக்கும் இந்து மத கோவில் எரிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் தலைவர் மௌளானா அதர் ரஹ்மான் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பாகிஸ்தானின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் ஷெரீன் மஸாரியும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், குற்றவாளிகளை கைபகர் பக்துன்கவா மாகாண அரசு நீதியின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.