சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதில் இன்று முதல் ஏற்படும் மாற்றம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் சகல சாரதி அனுமதி பத்திரங்களும் இராணுவத்தினரின் தலைமையில் அச்சிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தீர்மானத்துக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன் முதற்கட்டத்தின் கீழ் முதலாவது சாரதி அனுமதி பத்திர விநியோக பணிகள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளது.

வேரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இன்று முற்பகல் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

 

You may also like...