முட்டை விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

கேள்விக்கு அதிகளவான நிரம்பல் காணப்படுவதனால் முட்டையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளததாக தெரியவருகிறது.

முட்டையின் மொத்த விற்பனை விலையின் படி ஒரு முட்டை 14 ரூபா என இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரட்நாயக்சக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மூன்று நாட்களில் ஒரு முட்டையின் மொத்த விற்பனை விலை 12 ரூபாவாக மேலும் குறையும் என தெரிவித்துள்ளார்.

வழமையாக நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், தற்பொழுது இந்த தொகை 8.5 மில்லியனாக உயர்வடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருணாகல் பிங்கிரியவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...