குடிபோதையில் துப்பாக்கிச் சூடு செய்து அட்டாகசத்தில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர்

எப்போதும் குழப்பம் ஏற்படுத்தி பிரபல்யமாகும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் மீண்டும் ஒரு தடவை கண்டி தனியார் ஹோட்டல் ஒன்றில் குழப்பம் விளைவித்து வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

குடிபோதையில் அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இராஜாங்க அமைச்சர் அண்மையில் அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு குடிபோதையில் சென்று பாதுகாப்பு கடமையில் இருந்தவர்களுடன் முரண்பட்டார்.

புதிய அமைச்சரவை பதவி ஏற்றபோது ஒரு அரச நிறுவனத்துடன் கூடிய இராஜாங்க அமைச்சே இவருக்கு வழங்கப்பட்டது.

இதனை பகிரங்கமாக மேடைகளில் கூறி அதிருப்தியை வௌியிட்டிருந்தார் குறித்த இராஜாங்க அமைச்சர். அதன்பின்னர் அவருக்கு அண்மையில் முக்கிய துறைகள் அடங்கிய இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டது.

பெரிய அமைச்சு வழங்கப்பட்ட பின்னர் இவரின் நடத்தைகள் மிகவும் மோசமாக மாறியுள்ளது. இவை தெரிந்துதான் ஜனாதிபதி குறைந்த அதிகாரம் கொண்ட அமைச்சு ஒன்றை ஏற்கனவே வழங்கினாரோ என நினைக்கத் தோன்றுகிறது.

 

You may also like...