புதைப்பதா? எரிப்பதா? மாறுபட்ட இரண்டு அறிக்கைள் – முடிவெடுப்பதில் சிக்கல்

தமிழ் ​செய்திகள் இன்று


புதைப்பதா? எரிப்பதா? மாறுபட்ட இரண்டு அறிக்கைள் – முடிவெடுப்பதில் சிக்கல்

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைக்க முடியுமா என்பதை ஆராயவென நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்களின் நிலைப்பாடு வெவ்வேறாக காணப்படுவதால் இறுதி முடிவு ஒன்றை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நியமிக்க குழுவின் பரிந்துரைபடி சடலங்களை எரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே நியமித்த நிபுணர் குழு சடலங்களை புதைக்க அனுமதி அளிக்க முடியும் என பரிந்துரை செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாவது குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது என சுகாதார அமைச்சர் கூறியதுடன் இரண்டு குழுக்களையும் ஒன்று சேர்ந்து இறுதி அறிக்கை வழங்குமாறு பணித்துள்ளார்.

அதன்படி கடந்த டிசம்பர் 31ம் திகதி இரண்டு குழுக்களும் கூடியபோது இராஜாங்க அமைச்சின் குழு தமது பரிந்துரையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது.

இவ்விடயம் குறித்து உறுதியான முடிவு ஒன்றை அறிவிக்க சுகாதார அமைச்சின் அதிகாரிகள் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.