​போதைக்காக பெற்றோலை குடிக்கும் இளைஞர் – இறுதியில் நேர்ந்த அவலம்

போதைக்காக பெற்றோல் குடித்து அடிமையாகியிருந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மதுரன்குளி – உனாவேலிய பிரதேசத்தை 20 வயதுடைய இளைஞனே நேற்று மாலை உயிரிழந்துள்ளளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு பெற்றோல் பருகுவதற்காக அடிமையாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதிலிருந்து விடுபடுவதற்கு புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவர் அதற்கு அடிமையாகியுள்ளார்.

இதன் காரணமாக ஏற்பட்ட மனரீதியான பிரச்சினைக்கு மத்தியில் இந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

 

You may also like...