15 நாட்களாக கண்டி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலம்

கடந்த 19 ஆம் திகதி கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் ஒருவரினது உடல் கடந்த 15 நாட்களாக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக கண்டி சட்ட வைத்திய காரியாலயத்தின் மருத்துவர்கள் மற்றும் பணிக் குழாமினர் தெரிவித்துள்ளனர்.

அக்குறனை பகுதியை சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் அவரது வீட்டில் இருந்து தகவல் எதுவும் கிடைக்கப்பெறாமை மற்றும் அவரை அடையாளம் காட்டுவதற்கு எவரும் வருகை தராமை காரணமாகவே உயிரிழந்தவரின் சடலம் மருத்துவமனையின் பிரேத அறையில் தேங்கியுள்ளதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தமது பணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன எனவும் மருத்துவர்கள் மற்றும் பணிக்குழாமினர் குறிப்பிட்டுள்ளனர்.

You may also like...