ஒரே இலக்கமுடைய இரண்டு லொத்த சீட்டுக்களால் சர்ச்சை

தேசிய லொத்தர் சபையின் தொழில்நுட்ப பிரிவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மாதிரியான இலக்கங்களை கொண்ட இரண்டு லொத்தர் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 31ஆம் திகதி வெளியாகிய இந்த லொத்தர் சீட்டுகள் வெளியாகியுள்ளதனை தேசிய லொத்தர் சபையின் தொழில்நுட்ப பிரிவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அதன் செயற்பட்டாளர் கெலும் பிரியங்க தெரிவித்துள்ளார்.

பேஸ்பு பதிவொன்றை பதிவிட்டவர்,

2019.12.31ஆம் திகதி மஹஜன சம்பத லொத்தர் சீட்டுகள்ள இரண்டு ஒரே இலக்கங்களில் வெளியாகியிருந்தது. சமூக வலைத்தளம் ஊடாக அதனை தெரிந்து கொண்டேன்.

அவ்வாறான லொத்தர் சீட்டுகள் இரண்டும் தேசிய லொத்தர் சபையினால் வெளியிடப்பட்டுள்ள தொழில்நுட்ப பிரிவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மஹஜன சம்பத் லொத்தர் சீட்டு அச்சிடும், அரச அச்சிடும் கூட்டுத்தாபனத்தில் உள்ள குறைப்பாடுகளே காரணமாகும்.

இதன் பின்னர் அவ்வாறான லொத்தர் சீட்டு அச்சிடுவதனை தவிர்ப்பதற்காக தகுதியான வேலைத்திட்டம் நிர்மாணிப்பதற்கு தேசிய லொத்தர் சபையினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது ஒரு போதும் நடக்க கூடாத தவறாகும். ஏதோ ஒரு இடத்தில் அந்த லொத்தர் சீட்டிற்கு பரிசு கிடைத்திருந்தால் இரண்டு லொத்தர் சீட்டிற்கும் பணம் வழங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும்.

தேசிய லொத்தர் சபை மீது மக்கள் இதுவரை காலமும் வைத்திருந்த நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்பதனை உறுதியளிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like...