மரண வீட்டிற்குச் சென்ற கொரோனா நோயாளர் உயிரிழப்பு

பலங்கொட, கிவுல வெல பிரதேசத்தில் மரண வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக 10 குடும்பங்களை சேர்ந்த 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பலங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் கடந்த 29ஆம் திகதி பலங்கொடயில் இருந்து மரண வீட்டிற்கு சென்று, அங்கிருந்து மீண்டும் இரத்தினபுரிக்கு சென்றுள்ளார்.

பின்னர் கடந்த 30ஆம் திகதி அவர் தங்கியிருந்த விடுதியில் சிலருடன் விருந்து ஒன்றையும் நடத்தியுள்ளார்.

இதன் போது அவர் வழுக்கி விழுந்தமையினானல் நரம்பு வெடித்து இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பிய பின்னர் கடந்த 2ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பலங்கொட நகரத்தின் பல இடங்களுக்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

You may also like...