புறக்கோட்டையில் இன்று பொலிஸாரின் அதிரடி

கொழும்பில் முகக் கவசம் அணியாதிருந்த 300 பேருக்கு ரெபிட் எண்டிஜென் பாிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

இவர்களில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தொிவித்தார்.

முகக்கவசம் அணியாதவர்களை இனங்காண்பதற்காக புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 20 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

முகவசம் அணியாத காரணத்திற்காக கைது செய்யப்பட்ட இவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

You may also like...