பொலிஸாரிடமிருந்து வந்த கடுமையான எச்சரிக்கை

சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்களுக்கு எதிராக இன்று(05) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை மீறினால், அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதேநேரம், பிசிஆர் அல்லது என்டிஜன் சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளை மீறிச் செயற்படுவதால், சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார வழிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 74 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

You may also like...