மாவனல்லை புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் சிக்கினார்

தமிழ் ​செய்திகள் இன்று


மாவனல்லை புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் சிக்கினார்

மாவனல்லை – இம்புல பிரதேசத்தில் கடந்த 28ம் திகதி இரவு புத்தர் சிலையொன்றுக்கு சேதமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனல்லை பொலிஸாரால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை – ஹெட்டிமுள்ளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, 30 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சந்தேக நபர் சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு சென்று திரும்பி வந்துகொண்டிருந்த வேளையிலேயே குறித்த புத்தர் சிலைக்கு சேதமேற்படுத்தியுள்ளமை தொியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப ்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.