நாடு திரும்பும் இலங்கைப் பணியாளர்களுக்கு விஷேட செய்தி

தமிழ் ​செய்திகள் இன்று


நாடு திரும்பும் இலங்கைப் பணியாளர்களுக்கு விஷேட செய்தி

வௌிநாட்டில் இருந்து இலங்கை பணியாளர்களை அழைத்து வரும் நடவடிக்கையின் போது அதிக பணம் வசூலிக்கும் மாபியா கும்பல் ஒன்று செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ தெரிவித்தார்.

வௌிநாட்டில் இருந்து பயணிகளை அழைத்து வரும் நடவடிக்கையை சிலர் வியாபாரமாக மாற்றியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பயணிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின் அவர்களை அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லாது தங்களுக்கு தேவையான நபர்களின் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று அதிக பணம் வசூலிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குற்றம் சாட்டினார்.

விமான செலவிற்கு 2 லட்சம் கொடுத்து பட்டியலில் பெயர் இணைத்துக் கொள்ள முகவர்களுக்கு 15-20 ஆயிரம் கொடுத்து தனிமைப்படுத்தல் ஹோட்டலுக்கு நாளாந்தம் 12-15 ஆயிரம் கொடுத்து சுமார் 4 லட்சம் வரை செலவு செய்து வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தேசிய குற்றம் எனவும் ஜனாதிபதியின் வேலைத் திட்டங்களுக்கு முற்றிலும் எதிரானது எனவும் இத்திட்டம் மாபியாவாக மாறியுள்ளதென இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.