முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா

முகம்கவசம் அணியாமை உள்ளிட்ட சுகாதார விதிகளை மீறி செயற்படுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு பீசீஆர் அல்லது என்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி நேற்றையதினம் 1060 பேர் இந்த குற்றச்சாட்டின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவர்களில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்னும் 510 பேரின் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

You may also like...