ட்ரம்புக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக் மற்றும் டுவிட்டர்

தமிழ் ​செய்திகள் இன்று


ட்ரம்புக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக் மற்றும் டுவிட்டர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், சமூக வலைத்தளங்களிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டமை மற்றும் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக பொய்யாக குற்றம் சுமத்தியமை ஆகியன காரணங்களால் அவரின் டுவிட்டர், பேஸ்புக் கணக்குள் முடக்கப்பட்டுள்ளன.

ட்ரமப் வெளியிட் சமூக வலைத்தள பதிவொன்றில், நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை விழித்து, ‘ஐ லவ் யூ’ எனத் தெரிவித்தார் பின்னர் அவர்களை வீடு செல்லுமாறு கூறியிருந்தார்.

‘இது ஒரு அவசரநிலை, ட்ரம்பின் வீடியோவை நீக்குவது உட்பட நாம் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என பேஸ்புக் நிறுவனத்தின் உப தலைவர் கை ரோசென் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் மற்றும் அதன் இன்ஸ்டாகிராம் சேவைகளை ட்ரம்ப் 24 மணித்தியாலங்களுக்கு பயன்படுத்த முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளது.