உயர்தர மாணவர்களுக்கு விஷேட அறிவிப்பு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும், 2020 கல்வி பொதுத்தராதர உயர் தர செயன்முறை பரீட்சைகளில் தோற்றவுள்ள, மாணவர்களுக்காக பரீட்சைகள் திணைக்களத்தால் விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாணவர்கள், தமது பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி செயன்முறை பரீட்சைகளில் தோற்றலாமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், தமது பரீட்சை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையத்திற்கே பரீட்சார்த்திகள் செல்ல வேண்டுமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 11 ஆம் திகதி மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு, பாடசாலை மாணவர்களுக்காக “சிசு செரிய” பஸ் சேவை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த காலங்களில் சுமார் 800 சிசு செரிய பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

 

You may also like...