நினைவுத் தூபியை இடிக்க காரணம் இதுவா?

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா இதனை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே இந்த முடிவுக்கு செல்ல நேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

குறித்த தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்றுவதற்காக தொடர்ச்சியான அழுத்தம் தம்மீது பிரயோகிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்காவிட்டிருந்தால் வேறு தரப்புக்கள் உள் நுழைந்து அதனை அகற்றியிருக்கக்கூடும்.

அவ்வாறு நடைபெறுவது பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல என்பதாலுமே தாம் இவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

You may also like...