கொரோனா தடுப்பூசி வாங்க 6250 மில்லியன் நிதியை வழங்கும் பிரெண்டிக்ஸ் தலைவர்

கொரோனா வைரஸ் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக பிரண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அஷ்ரப் உமர் 6250 மில்லியன் ரூபா நிதியை இலங்கை அரசுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்த நிதியை பிரண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அஷ்ரப் உமர் உள்ளிட்ட சில வர்த்தகர்கள் இணைந்து வழங்க உள்ளதாகவும் இதனை அஷ்ரப் உமர் முன்னின்று ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் கொரோனா தடுப்பூசியை கொள்ளவனவு செய்ய நிதி தேவை என்று எப்போது அறிவித்தாலும், அதனை எந்த நேரத்திலும் வழங்க தயார் என அஷ்ரப் உமர் அறிவித்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா தடுப்பூசி கொள்வனவு செய்ய சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் செலவிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் நான்கில் ஒரு பங்கை அஷ்ரப் உமர் உள்ளிட்ட வர்த்தகர்கள் சிலர் பொறுபேற்க உள்ளதாக அரச உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like...