நான் நந்தசேன கோட்டாபய – எனக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன
அதிரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையையும் விமர்சித்தார்.
“நான் நந்தசேன கோட்டாபய, இது ஒரு நல்ல பெயர். எனது கதாபாத்திரத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன.
நான், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவாகவே இருக்க வேண்டும் என சில தேரர்கள் விரும்புகின்றனர்.
எமக்கு தேவை ஜனாதிபதி கோத்தாபய அல்ல முன்னர் இருந்த பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய எனவும் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் எனவும் எமது பௌத்த தேரர்கள் என்னிடம் சில வேளைகளில் கூறுகிறார்கள்.
அதனையும் என்னால் செய்ய முடியும். அந்த முறையில் வந்தால் அதே முறையில் பதில் கொடுக்கவும் என்னால் முடியும்.
நான் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், அந்த கதாபாத்திரங்களில் ஒன்றைச் செயல்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.
நான் எதற்கும் தயாராக இருக்கிறேன். எவ்வாறாயினும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் மக்களுக்காக உழைக்க விரும்புவதாக” ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.