ஹக்கீமுடன் தொடர்புபட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


ஹக்கீமுடன் தொடர்புபட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பிலிருந்த 10 உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென பாராளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இவர்கள் முதற்தர தொடர்பாளர்கள் என்றும் குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் தேவையான சுகாதார நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த 10 உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்து அவர்களை தனிமையிலிருக்குமாறு அறிவித்துள்ளதாக படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் இதுவரை இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.