ஹக்கீமுடன் தொடர்பை பேணிய MP க்கள் சிலரின் PCR முடிவுகள்

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய, அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமுடன் தொடர்புபட்டிருந்த காரணத்தால், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தன்னை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணியதாக அறியப்பட்ட தலதா அத்துகோரல மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...