கொரோனா பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் வாசுதேவ

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, கடந்த 5ஆம் திகதி தனது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடியுள்ளமை தெரியவந்துள்ளது.

நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, அமைச்சின் செயலாளர் பியத் பந்து விக்ரம உள்ளிட்ட பலரும் இந்த விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் அமைச்சர் வாசுதேவவின் பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இந்த விருந்துபசாரத்தில் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு தற்போது 85 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

 

You may also like...