ஐக்கிய தேசிய கட்சியில் அதிரடி மாற்றங்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


ஐக்கிய தேசிய கட்சியில் அதிரடி மாற்றங்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று முற்பகல் கூடி அதிரடி தீர்மானங்களை எடுத்துள்ளது.

அதன்படி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(13) கூடிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன மற்றும் உப தலைவராக அகிலவிராஜ் காரியவசம் தவிசாளராக வஜிர அபேவர்தன, பொருளாளராக ஏ.எஸ்.எம், மிஸ்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.