சொந்த நிதியில் கட்டப்பட்ட 09வது விகாரையை திறந்து வைத்த சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தனிப்பட்ட நிதி உதவியில் செயற்படுத்தப்படும் சசுனட்ட அருண திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விகாரை இரத்தனபுரி – பலாங்கொட பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

சஜித் பிரேமதாஸவின் 54வது பிறந்த தினமான நேற்று தர்மபால தேரரின் நினைவாக இந்த விகாரை திறந்து வைக்கப்பட்டது.

சசுனட்ட அருண திட்டத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்ட 9வது விகாரை இதுவாகும்.

 

You may also like...