புதியவகை வைரஸுடன் இலங்கை வந்த மொயின் அலி

இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் பிரிட்டனில் பரவிவரும் புதிய வீரியமிக்க வைரசின் மாதிரிகளுடன் ஒத்துப்போவதாக பொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸ் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரிடமிருந்தே கண்டுபிடிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து வீரர்கள் இலங்கை வந்துசேர்ந்தவுடன் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என தெரிவித்துள்ள அவர் அவ்வேளை மொயின் அலி பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானது என குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலை பூர்த்திசெய்துள்ள மொயின் அலியை மேலும் சில நாட்களிற்கு தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் நீலீகா மலவிகேயின் ஆராய்ச்சி குழுவினர் பரிசோதனை செய்த மாதிரிகளில் பிரிட்டனில் காணப்படும் கொரோனா வைரஸ்போன்ற ஒன்று காணப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

You may also like...