அலி சப்ரியின் திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள சட்டத்தரணிகள்

பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக சட்டத்தரணிகளை இணைத்துக் கொள்ளும் நீதி அமைச்சர் அலி சப்ரியின் திட்டத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு வௌியிட்டுளள்ளது.

150 சட்டத்தரணிகளை பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இத்திட்டமானது சட்டத்தரணிகளின் தொழில் அபிமானம் மற்றும் அவர்களின் சுயாதீன தன்மைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்திட்டத்திற்கு பதிலாக மாற்று யோசனைகளை குறித்த சங்கம் முன்வைத்துள்ளது.

1, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரச வழக்கு பிரிவு ஒன்றை ஏற்படுத்தல்

2, அந்த பிரிவிற்கு நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் வழக்குகளை மாத்திரம் கையாள அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

3, அந்த பிரிவிற்கு சட்டத்தரணிகள், வைத்தியர்கள், மரண விசாரணை அதிகாரிகள், கணனி இயக்குனர், கணக்காளர் என நிர்வாக அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

4, அந்த பிரிவினால் செய்யக்கூடிய விடயங்களை விளக்கி ஆவணம் வௌியிடல்

பிரிவில் உள்ளவர்களுக்கான பதவி உயர்வு இடமாற்றம் குறித்து திட்டம் தயாரித்தல்

5, சட்டமா அதிபரின் கண்காணிப்பில் அல்லது பகுதியளவு கண்காணிப்பில் இந்த பிரிவை இயங்கச் செய்தல்

போன்ற யோசனைகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி அமைச்சருக்கு முன்வைத்துள்ளது.

You may also like...