சாரதிகளுக்கு ஒரு விஷேட செய்தி – இன்றுடன் காலம் நிறைவு

தமிழ் ​செய்திகள் இன்று


சாரதிகளுக்கு ஒரு விஷேட செய்தி – இன்றுடன் காலம் நிறைவு

கொரோனா அச்சம் காரணமாக காலம் நிறைவடைந்த போக்குவரத்து அபராத பத்திரங்களுக்கான அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக்காலம் இன்றுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கொழும்பு மாநகராட்சி போக்குவரத்து காவற்துறை பிரிவினராலும், காவற்துறை அவசரகால பதிலளிப்பு பிரிவினராலும் வழங்கப்பட்ட அபராத பத்திரங்களுக்கான கட்டணங்களை செலுத்த எதிர்வரும் 08ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவற்துறையினரின் வேண்டுகோளுக்கமைய இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.