22 வயதில் 11 திருமணம் – இறுதியில் ஏற்பட்ட நிலை

தமிழ் ​செய்திகள் இன்று


22 வயதில் 11 திருமணம் – இறுதியில் ஏற்பட்ட நிலை

சென்னையில் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி கூட்டுப்பாலியலில் ஈடுபட வைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் பேஸ்புக் மூலமாக கணேஷ் என்ற நபருடன் நெருக்கமாக பழக்கமாகியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் பழகி வந்த நிலையில் இருவரும் காதலித்துள்ளனர். கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கணேஷ் அந்தப் பெண்ணுக்கு தாலி கட்டி மனைவியாக்கியுள்ளார்.

இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் த்தில் புகார் அளித்தனர். போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய போது கணேசுடன்தான் வாழ்வேன் என்று இளம்பெண் தெரிவித்ததால் போலீசார் அனுப்பி வைத்தனர்.

வில்லிவாக்கம், ராஜாஜி நகர் பகுதியில் உள்ள வீட்டில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தியுள்ளனர். திருமணம் ஆன முதல் நாள் இரவே கணேஷ் 17 வயது மதிக்கதக்க பெண் ஒருவரை உனக்கு வீட்டுப் பணிப்பெண் என்று அழைத்து வந்து அவருடன் தகாத உறவு வைத்துள்ளார்.

அதனைக் கண்டு இளம்பெண் கணவரிடம் கேட்ட போது அந்தப் பெண்ணை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு பிறகு கணேஷ் அந்தப்பெண்ணை மது அருந்திய நிலையில் கைகளை கட்டியும், வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

மேலும் இளம்பெண் தனது வீட்டுக்கு செல்லவேண்டும் என கூறிய போது அவரிடம் சமாதானமாக பேசுவது போல நடித்து மது அருந்தச் செய்து 17 வயது பெண் மற்றும் தனது நண்பர்களுடன் கூட்டுப்பாலியலில் ஈடுபடும்படி வற்புறுத்தியுள்ளார். அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் தனக்கு ஏற்கனவே 11 பெண்களுடன் திருமணம் ஆனதாகவும் அந்தப் பெண்களுடன் இருந்த அந்தரங்க வீடியோக்களை காட்டி இளம்பெண்ணிடம் சைக்கோ போல நடந்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் நொந்து போன அந்தப் பெண் தனக்கு நடந்ததை தனது வீட்டின் உரிமையாளர்களிடம் கூறி அவர்களது உதவியுடன் அங்கிருந்து தப்பி தனது பெற்றோரிடம் சென்று தஞ்சமடைந்துள்ளார்.

அது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் உள்ள ஆபாச வீடியோக்கள் மற்றும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான கணேஷ் மீது போக்சோ சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.