40 மில்லியன் பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை

தமிழ் ​செய்திகள் இன்று


40 மில்லியன் பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை

கம்பஹா-மிரிஸ்வத்த பகுதியில் தனியார் நிதி நிறுவனமொன்றில் நேற்று மாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

உந்துருளி ஒன்றில் பிரவேசித்த இரண்டு நபர்களால் 40 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் போன்றன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இரு கொள்ளையர்களும் தங்களது முகத்தை மறைக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 05 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.