உடன் அமுலாகும் வகையில் லொக்டவுன் செய்யப்பட்ட பிரதேசங்கள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் மினுவாங்கொட மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் கிழக்கு கல்லொலுவ மற்றும் மேற்கு கல்லொலுவ கிராம உத்தியோகத்தர் பிரிவும் மாத்தளை பொலிஸ் பிரிவின் வரகாமுர கிராம உத்தியோகத்தர் பிரிவு, மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, தெஹிப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் மாத்தவ கிராமம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு நகரில், அரசடி சந்தை வீதியிலுள்ள வீடொன்றில் 79 வயது ஆணொருவர், நேற்று (16) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

You may also like...