18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப் பயிற்சி

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடர்பான யோசனையொன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் உலகின் சில நாடுகள் சிறந்த முடிவுகளைபெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

You may also like...