கொரோனா தொற்றின் புதிய அறிகுறி ‘கொவிட் டங்’

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டங்’ (‘COVID Tongue’) என்ற புதிய அறிகுறியொன்று தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்குள்ளாவதுடன், நாக்கிற்கு வெளிப்புறத்தில் காயங்கள், சிவந்த கொப்புளங்கள், சிவந்த புள்ளிகள் போன்றவை அதன் அறிகுறிகளாக காணப்படுகின்றன.

எவரேனும் இந்த அறிகுறிகளைக் கொண்டிருப்பவராயின், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவதுடன், அவருக்கு மிக விரைவில் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய பரிந்துரைக்க வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிகுறிகள் குழந்தைகளுக்கு கூட தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குழந்தை மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

You may also like...