பெப்ரவரியில் இலங்கை வருகிறார் இம்ரான் கான்

தமிழ் ​செய்திகள் இன்று


பெப்ரவரியில் இலங்கை வருகிறார் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் பெப்ரவரியில் இலங்கைக்கு வருவார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்குப் பயணம் செய்யும் முதல் அரசாங்க தலைவராக அவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணம் பெப்ரவரி மாத இறுதியில் இடம்பெறும் என த ஹிந்து தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கொழும்பிற்கான மூன்று நாள் பயணத்தின், ஒரு மாதத்திற்குப் பின்னர் திட்டமிடப்பட்டுள்ள இம்ரான்கானின் வருகை, ஜெனீவாவில் நடைபெறப் போகும் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் முக்கியச் செல்வாக்கைச் செலுத்தலாம் என்று நம்பப்படுகிறது.