​பேஸ்புக் பதிவுக்காக கைதான பசால் மொஹமட் நிசாரின் வங்கியில் 625 இலட்சம் பணம்

தமிழ் ​செய்திகள் இன்று


​பேஸ்புக் பதிவுக்காக கைதான பசால் மொஹமட் நிசாரின் வங்கியில் 625 இலட்சம் பணம்

முகநூலில் மத அடிப்படைவாத கருத்துக்களை முன்வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகபரின் வங்கிக் கணக்கில் மில்லியன் கணக்கில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பசால் மொஹமட் நிசார் என்ற நபரை மேலதிக விசாரணைகளுக்கென குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு நீதவான் மொஹமட் மிஹார் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் வருமான வழிகள் இல்லாத 625 லட்சம் ரூபா இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் வீட்டுக் கூலியாக 80,000 ரூபாவையும் வாகன கூலியாக 50,000 ரூபாவையும் வியாபார நிலைய கூலியாக 12,5000 ரூபாவும் செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனால் சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு செயலாளர் தடுப்பு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.