மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு விஷேட செய்தி

நாட்டில் மோட்டார் சைக்கிள் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் மோட்டார் சைக்கிள்கள் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திட்டமிடப்பட்ட ஒரு குழுவினால் இந்த கொள்ளைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மோட்டார் சைக்கிள்களை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You may also like...