உக்ரைன் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதி

நாட்டுக்கு வருகைதந்துள்ள உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, தெஹிவளை உள்ளிட்ட மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் இதற்கான அனுமதியை கோரியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதியின் ஆலோசனை இன்றி எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பின்னவல மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல சஃபாரி பூங்கா உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படவில்லை.

You may also like...