மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான செய்தி

மேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்ட பின்னர் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய பாடசாலை தவணைக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த பாடசாலைகளை தவிர்ந்த அனைத்து பாடசாலைகளினதும் கல்விச் செயற்பாடுகள் வழமைப்போன்று இடம்பெற்று வருவதாக கல்விச் செயலாளர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் பாடசாலைகளை மீண்டும் ஆரம்ப கூடிய சாத்தியம் குறித்து கலந்துரையாடியதன் பின்னர் கல்வி அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் கல்விச் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

You may also like...