கேகாலை தம்மிக பண்டார மீது விசாரணை

தமிழ் ​செய்திகள் இன்று


கேகாலை தம்மிக பண்டார மீது விசாரணை

கேகாலை தம்மிக்க பண்டார என்பவரினால் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா ஒளடத பாணியை விநியோகம் செய்யும் போது தனிமைப்படுத்தல் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுகாதார மருத்துவ அதிகாரி உட்பட ஏனைய அதிகாரிகளுக்கு இதைப் பற்றி கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் போது, நேற்று கேகாலையில் உள்ள அவரது இல்லத்தில் கொரோனா ஒளடத பாணி விநியோகிக்கப்பட்டபோது தம்மிக பண்டாரவினால் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மீறப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.