பதுளை – வலப்பனை பிரதேசத்தில் நிலநடுக்கம்

பதுளை – மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய கிராமத்தில் இன்று அதிகாலை சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கங்கைள விட சற்று பலம்வாய்ந்ததாக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்று புவிச்சரிதவியல் ஆய்வு திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 தொடக்கம் 4 மணிவரையில் மூன்று தடவை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

சுமார் மூன்று செக்கன்களுக்கு உணரப்பட்டுள்ள இந்த நிலநடுக்கங்கள் காரணமாக அப்பிரதேச மக்கள் பெரும் அச்சமடைந்திருக்கின்றனர்.

எவ்வாறாயினும் இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் பதுளை – வலப்பனை பிரதேசத்தில் 1.8 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் ஒன்று இன்று பதிவாகியுளளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

You may also like...