மாணவர்களுக்கு கல்வியமைச்சிடமிருந்து விஷேட செய்தி

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள், நாளை(25) மீள திறக்கப்படவுள்ளன.

இதன்போது முதற்கட்டமாக தரம் 11 வகுப்பு மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன.

எனினும், கல்விப்பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களை இலக்கு வைத்து மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி மேல்மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் நாளை முதல் 907 பாடசாலை மாத்திரம் 11ம் தர மாணவர்களுக்காக திறக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நாளை முதல் பிரத்தியேக வகுப்புகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

You may also like...