காதி நீதிமன்றம் தேவையா? இல்லையா? சஜித் கூறிய விடயம்

காதி நீதிமன்றம் தேவையா இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

காதி நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பில் எதிர்கட்சி தலைவரிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் அளித்த சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார்.

இந்த அரசாங்கத்திற்கே மக்கள் ஆணையை வழங்கி அதிகாரத்தில் அமர்த்தி உள்ளனர். ஆகவே காதி நீதிமன்றம் தேவையா இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

எப்போதும் எதிர்க்கட்சி மக்கள் பக்கத்திலேயே இருக்கும் என்றும், இது தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாஸ கூறினார்.

You may also like...