சிறுமி மூலம் மோசமான செயலில் ஈடுபட்ட பெற்றோர் – CCTV யில் பதிவான காட்சி

அனுராதபுரத்தில் சொந்த பிள்ளையை ஈடுபடுத்தி நகை கொள்ளையில் ஈடுபட்ட பெற்றோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகை கடை ஒன்றில் தனது சிறிய மகளை ஈடுபடுத்தி திருட்டு நடவடிக்கையில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களை கைது செய்ய அனுராதபுரம் தலைமை குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த நகை கடை உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை அடுத்து 8 வயதுடைய சிறுமி ஒருவரால் தங்க மோதிரம் ஒன்றை திருடும் காட்சி கெமராவில் பதிவாகியுள்ளது.

பாடசாலை வயதுடைய குறித்த மாணவியும் 4 வயதுடைய சிறுமியும் பெற்றோருடன் குறித்த நகை கடைக்கு சென்றுள்ளனர்.

இதன் போது ஊழியரை திசை திருப்பிய பெற்றோர் சிறுமிகளை திருட வைத்துள்ள காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் நகை கடையின் கொடுக்கல் வாங்கல் நிறைவு செய்து நகைகளை கணக்கிடும் போது தங்க மோதிரம் ஒன்று திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும் இந்த திருட்டிற்கு தொடர்புடைய குடும்பம் எந்த பிரதேசத்தை சேர்ந்ததென பொலிஸாரால் இன்னமும் கண்டுபிடிக்காத நிலையில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

You may also like...