ஈஸ்டர் தாக்குதல் – நிறைவடைந்த விசாரணைகள்

தமிழ் ​செய்திகள் இன்று


ஈஸ்டர் தாக்குதல் – நிறைவடைந்த விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் இன்று (27) உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.

இன்று இடம்பெற்ற இறுதி அமர்வுக்குப் பிறகு உத்தியோகபூர்வமாக நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்கத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு வந்தது.

அதனடிப்படையில் ஒரு வருடகாலத்திற்கும் அதிகமாக 440 பேரிடம் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி விசாரணை குழுவின் இறுதி அறிக்கை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு-கிங்ஸ்பெரி உணவகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடாத்திய மொஹமட் முபாரக் என்பவரின் மனைவியான அயேசா சித்திகா உள்ளிட்ட 04 பேர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.